தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15 நாட்கள் பள்ளிக்கு வராதவர்களை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

15 நாட்கள் பள்ளிக்கு வராதவர்களை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

15 நாட்கள் பள்ளிக்கு வராதவர்களை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
பதினைந்து நாட்களுக்கு மேல் வருகை தராத மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: 
ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியின் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும். 15 நாட்களுக்கு மேல் வருகை தராத மாணவர்களை கண்காணிப்பது மட்டுமல்லாது, மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களையும், வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் டி.ஆர்.ஓ., செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க நிர்வாகி சொக்கலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us