தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருந்தாளுனர் நியமனம்: உத்தரவு பிறப்பிக்க தடை

மருந்தாளுனர் நியமனம்: உத்தரவு பிறப்பிக்க தடை

மருந்தாளுனர் நியமனம்: உத்தரவு பிறப்பிக்க தடை


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருந்தாளுனர் பணிக்கான நியமன உத்தரவுகள் பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மருத்துவ பணிகள் தேர்வு வாரியம், 986 மருந்தாளுனர்கள் பணிக்கான தேர்வு அறிவிப்பை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்டது; இந்தாண்டு ஏப்ரலில் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய மருந்தாளுனர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, கொரோனா காலத்தில் பணியாற்றிய தனக்கு ஊக்க மதிப்பெண் வழங்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சென்னை பட்டாபிராமை சேர்ந்த கமலகண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், &'ஊக்க மதிப்பெண் வழங்கியிருந்தால், கட் ஆப் மதிப்பெண்ணை கடந்து, தேர்ச்சி பெற்றிருப்பேன்; எனவே, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். அதுவரை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்&' என்று கூறியிருந்தார்.மனுவை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.கிருஷ்ணன் ஆஜரானார். மருந்தாளுனர்கள் பணி நியமனம் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க அரசுக்கு தடை விதித்து, விசாரணையை டிசம்பர் 14க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us