100 கல்லுாரிகளில் பாரதியார் பிறந்த நாள் பேச்சு போட்டி
100 கல்லுாரிகளில் பாரதியார் பிறந்த நாள் பேச்சு போட்டி
UPDATED : நவ 20, 2023 12:00 AM
ADDED : நவ 20, 2023 11:21 AM
சென்னை:
பாரதியார் பிறந்த நாளுக்கான, தேச ஒற்றுமை பேச்சுப் போட்டிகளை நடத்த, 100 கல்லுாரிகளுக்கு நிதி உதவி செய்ய, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்வந்துள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய மொழிக்குழு, பாரதியாரின் பிறந்த நாளான டிச., 11ல், தமிழக கல்லுாரிகளில், பாரத மொழிகளின் திருவிழா என்ற பெயரில் பேச்சுப் போட்டிகளை நடத்த முன்வந்துள்ளது.அதை ஏற்று, பாரதியாரின் கவிதைகளின் மையப்பொருளான, &'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு&' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்த, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த பேச்சுப் போட்டியை நடத்த விரும்பும் கல்லுாரிகள், இம்மாதம் 30ம் தேதிக்குள், செம்மொழி நிறுவன இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, office@cict.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதில், 100 கல்லுாரிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு கல்லுாரிக்கும் தலா 20,000 ரூபாயை செம்மொழி நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
