தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி சட்ட கல்லூரி கட்டடத்தில் விரிசல்

தேனி சட்ட கல்லூரி கட்டடத்தில் விரிசல்

தேனி சட்ட கல்லூரி கட்டடத்தில் விரிசல்


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்டம், தப்புக்குண்டுவில் உள்ள சட்ட கல்லுாரி புதிய கட்டடத்தில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்படுவதால், கட்டுமான உறுதித் தன்மையை சோதிக்க, கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள தனியார் பள்ளியில், 2019ல் சட்டக்கல்லுாரி துவக்கப்பட்டது. வீரபாண்டி - தப்புக்குண்டு ரோட்டில், 14 ஏக்கரில், 89.01 கோடி ரூபாய் செலவில், கல்லுாரிக்கென புதிதாக கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் 2020 ஜூனில் துவங்கின.கட்டுமான பணிகள் முடிந்த போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தேனி சட்டக் கல்லுாரிக்கான புதிய கட்டடங்கள், விடுதிகளை 2022 ஏப்ரலில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.கல்லுாரியில் இரு தளங்களில் வகுப்பறைகள், நுாலகம், ஆடிட்டோரியம், மாதிரி நீதிமன்றம் ஆகியன உள்ளன. கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து இரு ஆண்டுகள் கூட முழுமை பெறாத நிலையில், கட்டடத்தில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விரிசல்களை அவ்வப்போது பொதுப்பணித் துறையினர் சிமென்ட் பூச்சு வாயிலாக சீரமைக்கின்றனர்.மாணவர்கள் கூறுகையில், கல்லுாரிக்கென புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் கடந்தாண்டு வகுப்புகள் துவங்கப்பட்டன. சில நாட்களிலேயே கட்டட வெளி பகுதியின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன் விரிசல் அதிகரித்தது. அப்போது பூச்சு வேலை நடந்தது. தொடர்ந்து கடந்த மாதமும் விரிசல் அதிகரித்தது. இது தொடர்பாக, புகார்கள் சென்றதையடுத்து, அவசர, அவசரமாக விரிசல்களை சரி செய்தனர்.சிமென்ட் கலவை பூசி பெயின்ட் அடித்தனர். கட்டடம் கட்டப்பட்ட குறுகிய காலத்துக்குள் விரிசல்கள் தொடர்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.தேனி பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் கூறுகையில், புது கட்டடங்களில் வெளிப்புற பூச்சில் விரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். சுவரில் ஏற்பட்ட விரிசல்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதற்காக, கட்டுமான உறுதித்தன்மையில் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்றார்.திறக்கப்படாத விடுதி
கல்லுாரி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தபோது, மாணவ - மாணவியர் விடுதிகளும் திறக்கப்பட்டன. ஆனால், போதிய தண்ணீர் வசதி இல்லை. அதனால், பயன்பாட்டிற்கு வரவில்லை. வெளியூரில் இருந்து, தேனி வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், இன்று வரை வெளியே தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us