தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் பிரிட்டன் கல்விக் கண்காட்சி

சென்னையில் பிரிட்டன் கல்விக் கண்காட்சி

சென்னையில் பிரிட்டன் கல்விக் கண்காட்சி


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 03:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிரிட்டனில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட பிரிட்டிஷ் கவுன்சில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரிட்டன் கல்வி கண்காட்சியை நடத்துகிறது.


கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் படிக்க இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துவருகிறது. 44 ஆயிரம் இந்திய மாணவர்கள் தற்போது பிரிட்டனில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு பிரிட்டன் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட, 45 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண்டுதோறும் பிரிட்டன் கல்விக் கண்காட்சியை நடத்திவரும் பிரிட்டிஷ் கவுன்சில் இந்தாண்டு பிப். 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் நடத்த உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 58 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இக்கல்வி கண்காட்சியில் இடம்பெற உள்ளன. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை இக்கண்காட்சியில் நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பிரிட்டன் கல்விக்கு அடித்தளமிட்டுக் கொள்ளலாம். கண்காட்சி நேரம் பிற்பகல் 2 முதல் 7 மணிவரை. இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.


இதுகுறித்த விவரங்களுக்கு: www.educationuk-in.org



 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us