UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 09:59 AM
ஆண்டிபட்டி:
காலநிலை மாற்றம் குறித்த அரசு அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் வைகை வனவியல் பயிற்சி கல்லூரியில் நடந்தது.மாறிவரும் காலநிலை நெருக்கடியை சமாளிக்க காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இயக்கத்தின் செயல்பாடுகள், காலநிலை மாற்றம் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் தேனி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து நகரங்களும் மாசுபாட்டினால் பாதிப்படையும். இதனை தவிர்க்க அனைவரும் இன்று முதல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது. பயிலரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்தா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துணை இயக்குனர் மணீஸ் மீனா, உதவி வனப்பாதுகாவலர் விவேக், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரதிநிதி லோகேஷ் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
