கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க முன்னாள் ராணுவத்தினர் வலியுறுத்தல்
கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க முன்னாள் ராணுவத்தினர் வலியுறுத்தல்
UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 10:03 AM
தேனி:
தேனி முன்னாள் முப்படை வீரர்களின் நலசங்க கூட்டம அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.செயலாளர் முத்து, பொருளாளர் சீனிவாசகம், துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, துணைச்செயலாளர் தனசேகரன், மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க கலெக்டரிடம் மனு வழங்குவது, டில்லியில் போராடி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக திருச்சியில் நவ.,25ல் நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது.போடி, கம்பம், பெரியகுளம், கடமலைகுண்டு, ஆண்டிப்பட்டி, பூதிப்புரம், சிலமரத்துப்பட்டி பகுதிகளில் உள்ள சங்க உறுப்பினர்களை அழைத்து செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
