தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/54 பள்ளி விடுதிகள் மாற்றம் கல்லுாரி மாணவர்களுக்கு வசதி

54 பள்ளி விடுதிகள் மாற்றம் கல்லுாரி மாணவர்களுக்கு வசதி

54 பள்ளி விடுதிகள் மாற்றம் கல்லுாரி மாணவர்களுக்கு வசதி


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதிதிராவிடர் நலத்துறையின் 54 பள்ளி விடுதிகளை கல்லுாரி மாணவ மாணவியருக்கான விடுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது; இதற்கான அரசாணை விரைவில் வெளியாகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியருக்கு விடுதிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி விடுதி தேவை அதிகம் இல்லாத நிலையில் கல்லுாரி விடுதி தேவை அதிகரித்துள்ளது. எனவே பள்ளி விடுதிகளில் சிலவற்றை கல்லுாரி விடுதிகளாக மாற்றலாமா என அரசு தரப்பில்ஆலோசிக்கப்பட்டது.இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் தற்போதுள்ள 1 141 பள்ளி விடுதிகளில் 54 விடுதிகளை கல்லுாரி விடுதிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லுாரி விடுதிகள் எண்ணிக்கை 152ல் இருந்து 206 ஆக உயரும். இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us