தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கல்வி துறையில் 200 பதவிகளுக்கு கல்தா

பள்ளி கல்வி துறையில் 200 பதவிகளுக்கு கல்தா

பள்ளி கல்வி துறையில் 200 பதவிகளுக்கு கல்தா


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும், துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள பல்வேறு பதவிகள் உள்ளன. இவை அந்தந்த துறைகளுக்கு தேவையான பணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், பல்வேறு பணிகள் அடிப்படையில், 350 பதவிகள் நியமன பட்டியலில் உள்ளன. இவை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. இவற்றில், தற்போதைய தேவைகள் அடிப்படையில், பழைய, புதிய பதவிகள் குறித்து, தமிழக மனிதவள மேலாண்மை துறை ஆய்வு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, பணிகள் இல்லாத மற்றும் ஒரே பணிக்கு கூடுதலாக உள்ள பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர்.அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தற்போதுள்ள, 350 பதவி களை ஆய்வு செய்து, அவற்றில், தேவையில்லாமலும், உபரியாகவும் உள்ள, 200 பதவிகளை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.நீக்கம் செய்யப்படும் பதவிகளுக்கான பணியிடங்களை, தற்போது தேவைப்படக்கூடிய பதவிகளை, இணையான வேறு பதவி பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us