UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 11:05 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சாவடிமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, ஆசிரியை மாலதி ஆகியோர் பள்ளி ஆரம்பித்தும் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனையடுத்து, சிறிது நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர், ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
