UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 11:29 AM
சென்னை:
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் பல்லுாடக மையம் என்ற பெயரில் படப்பிடிப்பு ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கும் இந்த மையத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் செவ்வியல் இலக்கிய இலக்கணங்களை எளிதில் அறியும் வகையில் பழம்பதிப்பு நுால்களை டிஜிட்டல் மயப்படுத்தி இணையதளத்தில் வெளியிடும் பணி துவங்கி உள்ளது.மேலும் ஒளி ஒலி வழியாகவும் செவ்வியல் தமிழின் இலக்கிய இலக்கணத்தை பரப்பும் வகையில் 1472 சதுரடி பரப்பளவில் ஒரு கோடி ரூபாய் செலவில் பல்லுாடக மையம் என்ற ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுரைகள் கருத்தரங்குகள் சங்க இலக்கிய உரைகள் இலக்கண விளக்கங்கள் உள்ளிட்டவை படம் பிடிக்கப்பட்டு &'யூ டியூப்&' இணைப்பாக நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.இந்த வீடியோக்கள் ஆய்வாளர்கள் மாணவர்கள் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
