தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரஷ்ய கலாசாரத்தை ரசித்த மாணவர்கள்

ரஷ்ய கலாசாரத்தை ரசித்த மாணவர்கள்

ரஷ்ய கலாசாரத்தை ரசித்த மாணவர்கள்


UPDATED : நவ 25, 2023 12:00 AM

ADDED : நவ 25, 2023 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2023 12:00 AM ADDED : நவ 25, 2023 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையமும், ஆர்.யு.டி.என்., எனும் ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலையும் இணைந்து, ரஷ்ய மொழி தினத்தை சென்னை, ரஷ்ய கலாசார மையத்தில் நடத்தின.இதில், சென்னை பல்கலை உறுப்புக் கல்லுாரி மாணவர்கள், ரஷ்ய கலாசார ஆடை அணிந்து பங்கேற்றனர். ஆர்.யு.டி.என்., பல்கலை பேராசிரியர்களான கோஸ்லோஸ்கயா இகாட்டெரினா, அலிமோவா மரியா ஆகியோர் ரஷ்ய இலக்கியங்கள் குறித்து விளக்கினர். இதில், ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, ஊக்கத்தொகை, உதவித்தொகை உள்ளிட்டவை குறித்தும் விளக்கினர்.ரஷ்ய கலாசார மையத்தின் சார்பில், ரஷ்ய மொழி நாள் விழா கலை நிகழ்ச்சிகள், கல்விக்கான வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில், 150 மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் நேற்று நடந்தன.இதை, சென்னை மேயர் பிரியா துவக்கி வைத்தார். ரஷ்யன் கலாசார அறிவியல் மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் டோடோனவ், தமிழக கல்விக்கான நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us