தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை கல்லுாரியில் வேளாண் கல்விக்கண்காட்சி பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

கால்நடை கல்லுாரியில் வேளாண் கல்விக்கண்காட்சி பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

கால்நடை கல்லுாரியில் வேளாண் கல்விக்கண்காட்சி பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்


UPDATED : நவ 26, 2023 12:00 AM

ADDED : நவ 26, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2023 12:00 AM ADDED : நவ 26, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை அடுத்த கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த, வேளாண் கல்விக்கண்காட்சியில், கால்நடை பட்டப்படிப்பு சேர்க்கை குறித்து விளக்கப்பட்டது.உடுமலை அடுத்த கோழிக்குட்டை கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளான் கல்விக்கண்காட்சி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் குமாரவேல், தலைமை வகித்தார். கல்விப்பிரிவு தலைவர் அர்த்தநாரிஈஸ்வரன், வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, கோவை கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டார்.தொடர்ந்து, கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிமுறைகள், குறிப்பாக, உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்பு சேர்க்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.கண்காட்சியில், கால்நடை சார்ந்த விளக்கப்படங்கள், தீவனப்பொருட்கள், கால்நடை உற்பத்தி பொருட்கள், கால்நடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருந்தன. இதில், குடிமங்கலம், பெதப்பம்பட்டி மற்றும் ராமசந்திராபுரம் அரசு பள்ளிகளைச்சேர்ந்த, 143 மாணவர்கள் கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களிடையே , வினாடி -வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை டாக்டர் ராஜேஸ்வரி, குதிரை மருத்துவ நிபுணர் ஜெகன்மோகன் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் பிரபு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us