தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் மெகா அறிவியல் கண்காட்சி

ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் மெகா அறிவியல் கண்காட்சி

ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் மெகா அறிவியல் கண்காட்சி


UPDATED : நவ 27, 2023 12:00 AM

ADDED : நவ 27, 2023 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2023 12:00 AM ADDED : நவ 27, 2023 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் நடந்த மெகா அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நடந்த மெகா அறிவியல் கண்காட்சியில் 2,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1,310க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.எதிர்கால ஆற்றல் தேவைகள், பொருட்களில் உள்ள நச்சு பொருட்கள், எரிபொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் என பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டு இருந்த அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.நிறைவு நாளில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள், பெற்றோர்களை பாராட்டினார்.கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us