தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுதுங்கள் ஜே.இ.இ.,

எழுதுங்கள் ஜே.இ.இ.,

எழுதுங்கள் ஜே.இ.இ.,


UPDATED : நவ 28, 2023 12:00 AM

ADDED : நவ 29, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2023 12:00 AM ADDED : நவ 29, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது. மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு தேர்வுகள் ஜே.இ.இ.,யில் இடம்பெற்றுள்ளன. ஜே.இ.இ.,- மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவகள் மட்டுமே ஜே.இ.இ., -அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க முடியும். படிப்புகள்: 
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.டிசைன், பி.பிளான் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வாக ஜே.இ.இ., உள்ளது. மேலும், இளநிலை பொறியியல் படிப்புகளுடன், எம்.டெக்., / எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்காக, இத்தேர்வு நடத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள்: 
என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஜே.இ.இ., -மெயின் அடிப்படையிலும், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் ஜே.இ.இ., - அட்வான்ஸ்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தகுதிகள்:
12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். மேலும், வேதியியல்/ உயிரியல்/ உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு முறை:
ஆண்டுக்கு இரண்டு முறை ஜே.இ.இ.,-மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வில், மாணவர் பெறும் அதிக மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையில் அடுத்தக்கட்ட தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்டு எழுத மாணவர்கள் தகுதி பெறுகிறார்கள். பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு இத்தேர்வை எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.ஜே.இ.இ., மெயின் தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. பி.இ.,/பி.டெக்., - தாள் 1: கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 கேள்விகள் கேட்கப்படும்.பி.ஆர்க்., / பி.பிளான்., - தாள்2: பி.ஆர்க்., படிப்பிற்காக தாள் 2ஏ தேர்வில் 82 கேள்விகளும், பி.பிளான் படிப்பிற்காக தாள் 2பி தேர்வில் 105 கேள்விகளும் இடம்பெறும். அதிகபட்ச மதிப்பெண் 400. விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 30தேர்வு நாட்கள்:
ஜனவரி 24 - பிப்ரவரி 1, 2024விபரங்களுக்கு:
https://jeemain.nta.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us