UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 10:38 AM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசைக் கல்லுாரி; மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்ப கலைக் கல்லுாரி; தஞ்சாவூர் கலை பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் என, 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு இடத்திலும், நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில், ஓராண்டு சான்றிதழ் பயிற்சி துவக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். இம்மையங்களில் மாணவர் சேர்க்கை, நாளை துவங்க உள்ளது. பயிற்சி ஜன., 1ல் துவக்கப்பட உள்ளது. இதில், 17 வயதுக்கு மேற்பட்டோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம் என, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி தெரிவித்து உள்ளார்.
