தோட்டக்கலை பண்ணையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
தோட்டக்கலை பண்ணையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 09:28 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில், 30 ஏக்கரில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு, மர வகைகள், செடிகள், மிளகாய், கத்தரி நாற்றுகள் போன்றவை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்த பண்ணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ்1 வகுப்பு தொழிற்கல்வி மாணவ- மாணவியர், இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சியில், மாணவ- மாணவியருக்கு தாவரங்களின் இனப்பெருக்கம், தோட்டக்கலை இயந்திரங்களை கையாளும் முறைகள், மண் கலவைகளான தென்னை நார் கழிவுகள், பூஞ்சை வகைகள், கனிம வளங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலர் ரஞ்சித்குமார் விளக்கினார்.மேலும், நீர் பாசனம் மாடித்தோட்டம், தாவரங்களின் உயிர் கட்டுப்பாட்டு அலகு, மண் புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கப்பட்டது. இந்த பயிற்சியில், ஒரக்காட்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியை செல்வராணி, தொழிற்கல்வி பயிற்றுனர் யமுனா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
