தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை வேந்தர் நியமனத்தில் தலையீடு கேரள அரசுக்கு கோர்ட் கண்டிப்பு

துணை வேந்தர் நியமனத்தில் தலையீடு கேரள அரசுக்கு கோர்ட் கண்டிப்பு

துணை வேந்தர் நியமனத்தில் தலையீடு கேரள அரசுக்கு கோர்ட் கண்டிப்பு


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கேரளாவின் கண்ணுார் பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி வகித்து ஓய்வு பெற்ற கோபிநாத் ரவீந்திரன், மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு தேவையில்லாமல் குறுக்கிட்டுள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த நியமனத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.உத்தரவு
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கண்ணுார் பல்கலையின் துணை வேந்தராக இருந்த கோபிநாத் ரவீந்திரன் ஓய்வு பெற்றார். ஆனால், அவரை மீண்டும் துணை வேந்தராக நியமித்து, 2021 நவ., 23ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் அமர்வு, இந்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.தள்ளுபடி
அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலையின் வேந்தராக உள்ள மாநில கவர்னருக்கு மட்டுமே, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இணைவேந்தராக உள்ளவர்கள் உட்பட யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது.கண்ணுார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றிய கோபிநாத் ரவீந்திரன், 2021ல் ஓய்வு பெற்றார். விதிகளின்படி, ஓய்வு பெற்றவர்களுக்கு துணை வேந்தர் பதவி வழங்கக்கூடாது. ஆனால், அவரை மீண்டும் துணை வேந்தராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை வேந்தராக உள்ள கவர்னர் பிறப்பித்திருந்தாலும், இந்த விவகாரத்தில் மாநில அரசின் தேவையில்லாத குறுக்கீடு, தலையீடு அதிகம் இருந்துள்ளது. இதனால், மறு நியமனம் செய்யும் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்துவை நான் குறை கூற மாட்டேன். முதல்வர் பினராயி விஜயன், அவர் வாயிலாக எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் என கேரள கவர்னர்ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us