ராமச்சந்திரா பல்கலையில் மகப்பேறு குறித்த பயிலரங்கம்
ராமச்சந்திரா பல்கலையில் மகப்பேறு குறித்த பயிலரங்கம்
UPDATED : பிப் 02, 2010 12:00 AM
ADDED : பிப் 02, 2010 11:15 AM
அ நிறம் | அளவு
சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில், மகப்பேறு துறையின் சார்பில் ஒருவார திறமை மேம்பாட்டு பயிலரங்கம் நேற்று துவங்கியது.
இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவத் துறை பட்ட மேற்படிப்பு மாணவர்கள், கலந்து கொண்டனர். பயிலரங்கில், விஜயா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை இயக்குனர் சாவித்திரி சுப்ரமணியன், ஜோசப் நர்சிங் ஹோம் இயக்குனர் குரியன் ஜோசப், ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம், பல்துறை தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
