தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்


UPDATED : டிச 04, 2023 12:00 AM

ADDED : டிச 04, 2023 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2023 12:00 AM ADDED : டிச 04, 2023 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முக தேர்வு, நவம்பர், 22 முதல் நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இன்று நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, வரும், 6ம் தேதியும்; 6ம் தேதி அழைக்கப்பட்டவர்களுக்கு, 7ம் தேதியும் நேர்முக தேர்வு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.அதேபோல, வட்டார கல்வி அதிகாரி பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அதிகாரி பணிக்கு, டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us