வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு இக்னோ பயிற்சி
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு இக்னோ பயிற்சி
UPDATED : பிப் 02, 2010 12:00 AM
ADDED : பிப் 02, 2010 05:53 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: உத்தரபிரதேஷ், பிகார், அசாம், மேற்குவங்கம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞர்களுக்கு இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) கல்வி மற்றும் பயிற்சி வழங்க உள்ளது.
அடிப்படை கம்ப்யூட்டர், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங், ஜாப் டிரெய்னிங், டிப்ளமோ இன் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் படிப்புடன் கூடிய இன்டர்வியூ-ல் பங்கேற்கும் முறை ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பொது சேவை மையங்களில் ஆன்லைன் வழியாக இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.ஆர்.இ.ஐ. சாகாஜ் இ-வில்லேஜ் லிமிடெட் நிறுவனத்துடன் இக்னோ ஒப்பந்தம் செய்துள்ளது.
