தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசின் உதவித்தொகை

மத்திய அரசின் உதவித்தொகை

மத்திய அரசின் உதவித்தொகை


UPDATED : டிச 04, 2023 12:00 AM

ADDED : டிச 06, 2023 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2023 12:00 AM ADDED : டிச 06, 2023 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவ, மாணவிகளின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.படிப்புகள்:
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை திட்டம் பொருந்தும்.தகுதிகள்:
10ம் மற்றும் 12ம் வகுப்புகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருத்தல் அவசியம்.உதவித்தொகை எண்ணிக்கை:
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 82 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். உதவித்தொகை விபரம்:
தேர்வு செய்யப்படும் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா 12 ஆயிரம் ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு பயிலுபவர்களுக்கு 4ம் மற்றும் 5ம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலுபவர்களுக்கு இறுதி ஆண்டில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 31விபரங்களுக்கு:
https://scholarships.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us