தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணிக்கு போலி உத்தரவு கண்காணிக்க அறிவுறுத்தல்

ஆசிரியர் பணிக்கு போலி உத்தரவு கண்காணிக்க அறிவுறுத்தல்

ஆசிரியர் பணிக்கு போலி உத்தரவு கண்காணிக்க அறிவுறுத்தல்


UPDATED : பிப் 03, 2010 12:00 AM

ADDED : பிப் 03, 2010 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2010 12:00 AM ADDED : பிப் 03, 2010 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, சிலர் போலி உத்தரவுகள் தயாரித்ததை தொடர்ந்து, தொடக்க கல்வி அலுவலர்கள் விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் கொரட்டியைச் சேர்ந்த அருள்சாமி (38). ராமநாதபுரம் மீஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தார். வேலை கிடைக்காத நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கையெழுத்துடன் போலியாக நியமன உத்தரவு தயாரித்து, கடந்த மாதம் சிவகங்கை தொடக்க கல்வி அலுவலரிடம் கொடுத்தார். அந்த உத்தரவு போலி என உறுதி செய்யப்பட்டு, போலீசார் கைது செய்தனர்.


இதையடுத்து, தமிழகம் முழுவதும், கல்வித்துறையினர் விசாரணை நடத்தினர். திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில், போலி உத்தரவுடன் பலர் பணியில் சேர்ந்த விவரம் தெரிந்தது. இந்த உத்தரவுகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஒருவர் மூலம் தயாரிக்கப்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பணி உத்தரவுகள் குறித்து விழிப்புடன் இருக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘போலி உத்தரவு கொடுத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது. போலி என உறுதி செய்யப்பட்டால் அந்த நபர், உத்தரவு தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us