UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:02 AM
அ நிறம் | அளவு
தேனி:
அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புகலைப் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.பள்ளிகல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகிய கற்றக்கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பயிற்சி மாலையில் வழங்கப்பட உள்ளது. பயிற்சியாளரை நியமிக்கும் பொறுப்பு பள்ளி மேலாண்மை குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் போது ஆசிரியைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
