தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் ஒழுக்க கமிட்டி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

பள்ளிகளில் ஒழுக்க கமிட்டி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


UPDATED : டிச 07, 2023 12:00 AM

ADDED : டிச 07, 2023 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2023 12:00 AM ADDED : டிச 07, 2023 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் பள்ளியில் புகுந்து ஆசிரியரை, இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் இரு நாட்கள் முன் திருத்தங்கலில் அரசு பள்ளியில் மாணவரை கண்டித்ததற்காக ஆசிரியரை சக மாணவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து ஒழுக்க கமிட்டிகளை தொடர்ந்து ஏற்படுத்த அறிவுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர்.நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:
அனைத்து பள்ளிகளிலும் ஒழுக்க கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒழுக்க கமிட்டிகளை உருவாக்கிய பள்ளிகளை அதன் விவரங்களை கூகுள் ஸ்பிரட்ஷீட்டில் டிச. 6 மதியம் 2:00 மணிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். உருவாக்காத அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கமிட்டிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். எஸ்.பி.,ஸ்ரீனிவாச பெருமாள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட விழிப்புணர்வு பி.டி.எப்.,ஐ அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம் மூலமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகம் மூலமாக மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us