UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:44 AM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை நகைச்சுவை சங்கத்தின் வாங்க சிரிக்கலாம் நிகழ்ச்சி, கிக்கானி கலையரங்கத்தில் நடைபெற்றது. ஆடிட்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திக் வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:
கல்வி கற்பது பணம் சம்பாதிப்பதற்கு அல்ல. அறிவை வளர்த்துக் கொள்ளத்தான். தாவணிக் கனவுகள் என்ற, எனது திரைப்படம் முதல் முறையாக ரூ1.5 கோடி வருமானத்தை ஈட்டியது. இதனால் படம் ரிலீஸ் ஆன அன்றே, வருமான வரித்துறைனர் சோதனை நடத்தினர். நான் பாக்யா என்ற பத்திரிகையை துவங்கினேன். அது தொடங்கிய பின்தான், மிகப்பெரிய சந்தோஷத்தை அடைந்தேன். நாமே கஷ்டப்பட்டு, நாமே முன்னேற வேண்டும் என்பவர்கள் தான் சினிமாவை நோக்கி வரவேண்டும்.
