மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூலைக்குள் முடிக்க எம்.பி., கோரிக்கை
மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூலைக்குள் முடிக்க எம்.பி., கோரிக்கை
UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 11:09 AM
புதுச்சேரி:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூலைக்குள் முடிக்க வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர், லோக்சபாவில் பேசியதாவது:
மருத்துவம், பாராமெடிக்கல் மற்றும் இன்ஜினியரிங் தொழில்முறை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் வரை நீட்டிப்பதை தடுக்க வேண்டும். அனைத்து கல்லுாரி, பல்கலைக் கழகங்களில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளின் கல்வியாண்டு ஜூனில் துவங்கும். சேர்க்கை ஜூலையில் நிறைவடையும்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு நவம்பரில் முடியும். அறிவியல் படிப்புகளில் சேருபவர்கள் தொழில்முறை படிப்புகளில் சீட் கிடைத்தவுடன், அந்த படிப்பை பாதியில் விடுகின்றனர். இது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் காலியிடங்களை அதிகரிக்கும்.பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான போர்ட்டல்களான அனைத்து உயர்நிலைத் தேர்வுகளும் ஏப்ரல் முன்பே முடிக்கப்படுகின்றன. முடிவுகள் மே மாதத்திலும் வெளியிடப்படுகின்றன. இதனால் பல ஏழை மாணவர்களால் இந்த பயிற்சி மையங்களில் சேர முடியாது.தேசிய அளவிலான ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளை தகுதித் தேர்வுகள் முடிந்த ஒரு வாரத்தில் நடத்தினால் இதை எளிதில் தவிர்க்கலாம். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
