தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சிங் படிப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நர்சிங் படிப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நர்சிங் படிப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : டிச 07, 2023 12:00 AM

ADDED : டிச 07, 2023 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2023 12:00 AM ADDED : டிச 07, 2023 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவ, மாணவியர், அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ம் ஆண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியர், நர்சிங் டிப்ளமோ படிப்பிற்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழக நர்சிங் டிப்ளேமா படிப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பயிற்சி கல்லுாரிகளில் சேரலாம்.அந்த கல்லுாரிகளில் தொடர்ந்து, 3 ஆண்டு படிப்பதற்கு ஆகும் கல்வி கட்டணம், புத்தக கட்டணம், விடுதி கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள், ஒரு மாணவியருக்கு, 70,000 ரூபாய். இந்த தொகை முழுவதையும் அரசே ஏற்கும். 2022 - 23ம் ஆண்டிற்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ள, பழங்குடியின மாணவியர், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்துள்ள, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவியரின் விபரங்கள், ஜாதிச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மாற்றுச்சான்றிதழ் நகல் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான சான்று ஆகியவற்றுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், வரும் 10க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.விபரங்களுக்கு, கொல்லிமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நல அலுவலக, திட்ட அலுவலரை, 94438 36370 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us