UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:06 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில் அந்தந்த பல்கலைகள் சார்பில் ஏற்கனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி நவம்பர் முதல் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன.மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் அண்ணா பல்கலையின் தேர்வுகள் 4ம் தேதி முதல் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 11ம் தேதி துவங்கும் என்றும் புதிய கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் அறிவித்துள்ளார்.இதுகுறித்த விபரங்கள் அண்ணா பல்கலையின் https://aucoe.annauniv.edu/index.php என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
