தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுவைகளின் சங்கமம்!: மாணவர்கள் உணவு வகைகள் படைப்பு

சுவைகளின் சங்கமம்!: மாணவர்கள் உணவு வகைகள் படைப்பு

சுவைகளின் சங்கமம்!: மாணவர்கள் உணவு வகைகள் படைப்பு


UPDATED : டிச 08, 2023 12:00 AM

ADDED : டிச 08, 2023 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2023 12:00 AM ADDED : டிச 08, 2023 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி பள்ளியில், சுவைகளின் சங்கமம் மற்றும் பாரம்பரியம் காப்போம் என்ற நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுவைகளின் சங்கமம் மற்றும் பாரம்பரியம் காப்போம் என்ற தலைப்பில் உணவுத்திருவிழா நடந்தது.தலைமை ஆசிரியர் தினகரன் தலைமை வகித்தார். மண்ணுார் ஊராட்சி துணைத்தலைவர் ராசு, சுவை அரங்கத்தை திறந்து வைத்தார்.பாரம்பரிய முறையில், தங்களது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை ராகி, தட்டவடை, ராகி, சேமியா, குழிப்பணியாரம், துாதுவளை, மூலிகை சாறு, புதினா சாறு, மல்லிகை தழை கசாயம், கொண்டைக்கடலை வகைகள், பயறு வகைகள், தயிர் சாதம், பருப்பு சாதம் ஆகியவை மாணவர்கள் தயாரித்து காட்சிப்படுத்தினர்.ஆர். கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பகவதி, மாணவ, மாணவியரின் இயற்கையான உணவு மற்றும் சத்தான உணவு வகைகள் குறித்தான புரிதல்களை பாராட்டினார். மாணவர்கள் தயாரித்துக்கொண்டு வந்த உணவு வகைகளின் தரம், சுவை குறித்து பரிசோதித்தனர்.அரசுப்பள்ளி மாணவர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் பள்ளி பார்வை என்ற நிகழ்வாக கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுபிக் ஷா, ஸ்ரீ ஜேஸ், ஆகியோர் உணவு சங்கமம் சிறப்பு நிகழ்ச்சிகளை பதிவு செய்தனர்.பள்ளி ஆசிரியை சத்தியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us