தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காரைக்குடியில் இன்று போலீஸ் எழுத்து தேர்வு

காரைக்குடியில் இன்று போலீஸ் எழுத்து தேர்வு

காரைக்குடியில் இன்று போலீஸ் எழுத்து தேர்வு


UPDATED : டிச 10, 2023 12:00 AM

ADDED : டிச 10, 2023 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2023 12:00 AM ADDED : டிச 10, 2023 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடியில் உள்ள 11 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள கிரேடு 2 போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 359 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா அரசு இன்ஜி., கல்லூரி, டாக்டர். உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அழகப்பா மெட்ரிக் பள்ளி, அழகப்பா மாதிரி பள்ளி, முத்துப்பட்டினம் வித்யா கிரி மெட்ரிக் பள்ளி, ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் இரு பள்ளிகள், அழகப்பா பல்கலை., மேனேஜ்மென்ட் ப்ளாக் உட்பட 11 மையங்களில் தேர்வு நடக்கிறது.இதில், பெண்கள் ஆயிரத்து 100 உட்பட 8 ஆயிரத்து 453 பேர் தேர்வு எழுதவுள்ளனர். மாவட்ட எஸ்.பி., அரவிந்த் தலைமையில் 900க்கும் ஏற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us