தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/784 கி., கஞ்சா, போதை சாக்லேட்; 11 மாதங்களில் பறிமுதல்

784 கி., கஞ்சா, போதை சாக்லேட்; 11 மாதங்களில் பறிமுதல்

784 கி., கஞ்சா, போதை சாக்லேட்; 11 மாதங்களில் பறிமுதல்


UPDATED : டிச 10, 2023 12:00 AM

ADDED : டிச 10, 2023 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2023 12:00 AM ADDED : டிச 10, 2023 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜன., 1 முதல் இதுவரை, 784 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக அரசு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளது. இது தவிர, கஞ்சா மற்றும் போதை சாக்லேட் பறிமுதலில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்துார், சூலுார், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில், 60 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. நவ., மாதத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 206 கடைகளுக்கு, 10 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த ஆண்டு ஜன., 1 முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட, 591 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 784 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us