தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 கல்லுாரி மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிப்பு

100 கல்லுாரி மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிப்பு

100 கல்லுாரி மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிப்பு


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லி பல்கலையின், ஷாஹீத் பகத்சிங் கல்லூரியில் 40 சதவீதத்துக்கும் குறைவான வருகைப் பதிவேடு கொண்ட 100 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி அனுமதி மறுக்கப்படுள்ளது.இதுகுறித்து, ஷாஹீத் பகத்சிங் கல்லுாரி அருண் குமார் அட்ரீ கூறியதாவது:
வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்கள் தேர்வெழுத தடை விதிப்பது, இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை. எந்த செமஸ்டரிலும் 40 சதவீதத்துக்கும் குறைவான வருகைப்பதிவு உள்ள பி.ஏ., மற்றும் பி.காம் படிக்கும் நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வெழுத தகுதி பெறுவதற்கு குறைந்தபட்ச வருகையை நிர்ணயிக்கும் டில்லி பல்கலை விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில மாணவர்கள் கல்லுாரிக்கு வருவதில் மிகவும் மெத்தனமாக இருக்கின்றனர். பல்கலை விதிமுறைகளின்படி விளையாட்டு அல்லது கலாசார குழுவில் உள்ள மாணவர்களின் குறைவான வருகை நாட்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.கடந்த 8ம் தேதி, ஹானர்ஸ் படிப்பில் 1,397 மாணவர்களுக்கு வருகை நாட்கள் குறைவு காரணமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. நாற்பது முதல் 66.66 சதவீதம் வரை வருகைப்பதிவு உள்ள மாணவர்கள், அடுத்த செமஸ்டரில் வருகைப் பற்றாக்குறையை ஈடுகட்ட டிசம்பர் 12ம் தேதிக்குள் உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதிச் சீட்டு வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us