UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 09:37 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:
விளையாட்டாக பஸ்ஸில் ஏறி பாட்டி வீட்டுக்கு சென்று திரும்பி வர வழி தெரியாமல் நின்ற மாணவிகளை போலீசார் மீட்டனர்.காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்த, 11 வயது சிறுமிகள் இருவர், ஆறாம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாணவிகளை காணவில்லை. காங்கேயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடி வந்த நிலையில், திருப்பூர் அருகே செட்டிபாளையத்தில், இருவரும் இருப்பது தெரிய வந்தது.போலீசார் மாணவிகளை மீட்டு விசாரித்தனர். விளையாட்டாக பஸ்ஸில் ஏறி பாட்டி வீட்டுக்கு சென்றவர்கள், திரும்பி வர வழி தெரியாமல் தவித்ததும் தெரிய வந்தது. இருவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
