நரிக்கட்டியூர் தொடக்க பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
நரிக்கட்டியூர் தொடக்க பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 09:46 AM
கரூர்:
கரூர் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பங்களிப்பு, பள்ளியின் உட்கட்டமைப்பு வசதியை மேற்படுத்துவது போன்ற பணிகளில் சிறந்து விளங்கும் அரசு நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், காமராஜர் விருது வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டில், கரூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி பிரிவில், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், நடுநிலைப் பள்ளி பிரிவில் லாலாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் விருதுக்கு தேர்வாகின.விருது வழங்கும் விழா கரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமைவகித்து, நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும், 25,000- ரூபாய் க்கான காசோலை ஆகியவற்றை பள்ளித்தலைமை ஆசிரியை விஜயலலிதாவிடம் வழங்கினார்.
