போதை டிரைவரால் தனியார் பள்ளி பஸ் விபத்து... குழந்தைகள் உயிர்தப்பினர்...
போதை டிரைவரால் தனியார் பள்ளி பஸ் விபத்து... குழந்தைகள் உயிர்தப்பினர்...
UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 06:57 PM
கோவை:
போதையில் தனியார் பள்ளி வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம், கதிர்நாயக்கன் பாளையத்தில் பஸ்ட் ஸ்கூல் உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று, கதிர் நாயக்கன்பாளையம் பேஸ் -3 யில் குழந்தைகளை இறக்கி விட சென்றது. அப்போது, பஸ்ஸில் போதையில் இருந்த டிரைவர் பஸ்சை இயக்க முடியாமல் தடுமாறினார்.இதனால் பஸ் அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமாரன் கூறுகையில், இது குறித்து விசாரணை நடத்தி தொடர்புடைய டிரைவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றார்.
