sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மிட்டாய் என நினைத்து மாத்திரைகள் சாப்பிட்ட 13 மாணவர்கள் மயக்கம்

மிட்டாய் என நினைத்து மாத்திரைகள் சாப்பிட்ட 13 மாணவர்கள் மயக்கம்

மிட்டாய் என நினைத்து மாத்திரைகள் சாப்பிட்ட 13 மாணவர்கள் மயக்கம்


UPDATED : டிச 14, 2023 12:00 AM

ADDED : டிச 14, 2023 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2023 12:00 AM ADDED : டிச 14, 2023 06:58 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒன்றியம் மணலுார் ஊராட்சி ஆரபத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மிட்டாய் என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர்கள் 13 பேர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆரபத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மகள் இபாஞ்சலி 8, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவரது உறவினர் வீட்டில் போதை பழக்கத்தை மறக்க பயன்படுத்தும் நிக்கோட்டின் பசை மாத்திரைகள் கிடந்துள்ளன. இபாஞ்சலி அவற்றை மிட்டாய் என நினைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்றார். அங்கு சக மாணவர்களுக்கும் கொடுத்து அவரும் சாப்பிட்டுள்ளார்.சில நிமிடங்களில் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் விசாரித்த போது மாத்திரைகள் சாப்பிட்டது தெரிந்தது. இதையடுத்து மாத்திரை சாப்பிட்ட 13 மாணவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெஜினா, நிஷாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மாணவர்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us