UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 06:59 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள், கடந்த, 11ம் தேதி நடப்பதாக இருந்தது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், 11ம் தேதி துவங்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, நேற்று துவங்கின. பொது தேர்வுகளை போல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மாநிலம் முழுதும் ஒரே வகை வினாத்தாள் வழங்கப்பட்டன.
