UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 09:55 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில், கடிதம் எழுதும் போட்டி, திருப்பூர் மாவட்டத்தில், 19 கல்லுாரிகளில் நடந்தது. முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பேஷன் கல்லுாரியில் நடந்த போட்டியை கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். மாணவ, மாணவியர் 118 பேர் பங்கேற்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கடிதம் எழுதினர். கடிதங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தபாலில் அனுப்பிவைத்தனர்.மாவட்ட அளவில் சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும். மாநில அளவில் சிறந்த பத்து கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25ல், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலரால், பரிசு வழங்கப்படும்.
