UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 10:02 AM
அ நிறம் | அளவு
வால்பாறை:
இளம்பாரதி விருது பெற்ற கல்லுாரி மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், 2023ம் ஆண்டிற்கான இளம்பாரதி விருது வழங்கும் விழா நடந்தது. இதில், பல்வேறு கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் எம்.எஸ்சி., படிக்கும் மாணவன் ராகுல், இந்த ஆண்டிற்கான இளம்பாரதி விருதினை பெற்றுள்ளார். விருது பெற்ற மாணவனை கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
