UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 09:12 AM
அ நிறம் | அளவு
மதுரை:
திருக்குறளை முழுமையான மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவருக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை உலகத்தமிழ்ச்சங்கத்தில் நேரிலும், www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலோ பெறலாம். பூர்த்தி செய்து டிச.,31க்குள் தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர், உலகத்தமிழ்ச்சங்க வளாகம், மதுரை 625 020 என்ற முகவரியில் நேரில், தபால் மூலம் அனுப்பலாம். இ மெயில் மூலமும் (tamilvalarchimdu@gmail.com) அனுப்பலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
