UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 01:55 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் படிக்கும், மாற்று திறன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, இயன்முறை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் என, 1,995 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் தற்போது, 20,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும் என, சிறப்பு பயிற்றுனர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசு, சம்பளத்தை, 5,000 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மாதம், 25,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
