UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 01:56 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பயிற்சி முடித்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், எட்டு பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.பயிற்சி நிறைவு செய்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உதவி எஸ்.பி.,யாகவும்; கெல்கர் சுப்ரமண்யா பால்சந்திரா, துாத்துக்குடி மாவட்டம் டவுன் உதவி எஸ்.பி.,யாகவும்; பிரசன்ன குமார், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உதவி எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஷாஹ்னாஸ், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு; சிபின் திண்டுக்கல் டவுன்; உதயகுமார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார்; யாங்சென் டோமா பூட்டியா, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்; சிவராமன் ராமநாதபுரம் உதவி எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
