UPDATED : டிச 17, 2023 12:00 AM
ADDED : டிச 17, 2023 10:17 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வில் 2452 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் 105 மாணவர்கள் எழுதவில்லை.கிராம மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் திறனாய்வுதேர்வெழுத தகுதி பெற்றவர்கள்.இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படுகிறது . நடப்புக் கல்வி ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வில் பழநி கல்வி மாவட்டத்தில் 935, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 1622 என 2557 மாணவர்கள் விண்ணப்பித்தனர். தேர்வுக்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 2452 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் 44 மாணவர்கள், 61 மாணவிகள் என 105 பேர் தேர்வு எழுத வில்லை.
