தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரைவில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் சக்கரபாணி தகவல்

விரைவில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் சக்கரபாணி தகவல்

விரைவில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் சக்கரபாணி தகவல்


UPDATED : டிச 17, 2023 12:00 AM

ADDED : டிச 17, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2023 12:00 AM ADDED : டிச 17, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சி பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் போட்டித் தேர்வு அறிவு சார் மையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். கள்ளிமந்தையம் அருகே கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லுாரி, காளாஞ்சிப்பட்டியில் கட்டப்பட்டு வரும் போட்டி தேர்வு பயிற்சி மையம், எம்.எல்.ஏ, அலுவலக கட்டடம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:
காளாஞ்சிபட்டியில் கட்டப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவு சார் மையம் கட்டுமான பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இங்கு மத்திய ,மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.கலெக்டர் பூங்கொடி, ஆர்.டி.ஓ., சரவணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, முதன்மை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் ,வேதா, ஊராட்சி தலைவர் அமுதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், ராமகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us