தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி மைய பாதையை சீரமைக்க நடவடிக்கை தேவை

ஆசிரியர் பயிற்சி மைய பாதையை சீரமைக்க நடவடிக்கை தேவை

ஆசிரியர் பயிற்சி மைய பாதையை சீரமைக்க நடவடிக்கை தேவை


UPDATED : டிச 18, 2023 12:00 AM

ADDED : டிச 18, 2023 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2023 12:00 AM ADDED : டிச 18, 2023 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவுஞ்சூர்:
பவுஞ்சூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, வட்டார அரசு ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளது.லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இங்கு பயிற்சி அளிப்பது வழக்கம். மேலும், வட்டார அளவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள், பயிற்சி மையத்தில் நடத்தப்படுகின்றன.சாலையில் இருந்து பயிற்சி மையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி உள்ளதால், நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் செல்லும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பயிற்சி மையத்திற்கு செல்லும் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us