தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணி பாதுகாப்பு சட்டம் ஆசிரியர் கழகம் தீர்மானம்

பணி பாதுகாப்பு சட்டம் ஆசிரியர் கழகம் தீர்மானம்

பணி பாதுகாப்பு சட்டம் ஆசிரியர் கழகம் தீர்மானம்


UPDATED : டிச 18, 2023 12:00 AM

ADDED : டிச 18, 2023 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2023 12:00 AM ADDED : டிச 18, 2023 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் நடந்த முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.ராமநாதபுரத்தில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்டத் தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். கல்வி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் ஆர்.கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாணவர்களால் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நுாறுசதவீதம் தேர்ச்சி என்ற ஒற்றை இலக்கு நோக்கி செல்வதற்கானநெருக்கடி கொடுப்பதால் இது போன்ற செயல்கள் நடக்கின்றன. எனவே தமிழகஅரசு ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எமிஸ் பதிவில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.மாவட்டத்தில் ஒரே இடத்தில் கல்வி மாவட்டங்கள் இருப்பதால் ஆசிரியர்கள் தங்கள் அலுவல்களுக்காக நீண்ட துாரம் அலைய வேண்டியிருப்பதால் பழையமுறைப்படி பரமக்குடி கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும்.மாவட்டத்தில் புதியதாக மேம்படுத்தப்பட்ட பள்ளிகளில் கலைப்பிரிவுதுவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us