UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 10:21 AM
செங்கல்பட்டு:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஐந்தாவது ஆண்டாக, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தி வருகிறது.இந்த ஆண்டு புத்தக திருவிழாவை, வரும் 28ம் தேதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைக்கிறார். வரும் ஜன., 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த புத்தக கண்காட்சியில், 50 அரங்குகளில், ஆயிரக்கணக்கான நுால்கள் வைக்கப்பட உள்ளன.இது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான நோட்டீஸ், இலச்சினை ஆகியவற்றை, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர்ராகுல்நாத் நேற்றுமுன்தினம் வெளியிட்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்து பாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, கோட்டாட்சியர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
