திருநெல்வேலியில் 36 கிராம மக்கள் தவிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலியில் 36 கிராம மக்கள் தவிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 18, 2023 05:33 PM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. டவுன் பேட்டை ரோட்டில் அமைந்துள்ள வீடு இடிந்து தரைமட்டமானது. நாளை (டிச.,19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, ஏர்வாடி பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாரப்பேட்டை, பாளை பஸ்டாண்ட், புது பஸ்டாண்ட், மேலப்பாளையம், அம்பாசமுத்திரம், அரியநாயகிபுரம், குறிஞ்சி, மேலப்பாளையம், சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.நாங்குநேரி, ஏர்வாடி இடையே வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டது.36 கிராம மக்கள் அத்தியாவசிய பொருள் உட்பட எந்த வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். திருநெல்வேலி டவுன் பேட்டை பகுதியில் தாமிரபரணி ஆற்று நீர் உட்புகுந்தது. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. கிராமத்தில் உள்ள மக்கள் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் கவலையடைந்துள்ளனர்.தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் விளாகம், மேலப்பாளையம், சுத்தமல்லி, கருப்பன் துறை, விளாகம், சமாதானபுரம், கொக்கிரகுளம், பாளையங்கோட்டை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.டவுன் பேட்டை ரோட்டில் அமைந்துள்ள வீடு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்தவர்கள் நேற்று இரவு வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலியில் கனமழை, வெள்ளம் காரணமாக நாளை (டிச.,19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
