தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு ஆன்லைன் படிப்புகள்: மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

வெளிநாட்டு ஆன்லைன் படிப்புகள்: மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

வெளிநாட்டு ஆன்லைன் படிப்புகள்: மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை


UPDATED : டிச 18, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அங்கீகாரம் பெறாத வெளிநாட்டு ஆன்லைன் பட்டப்படிப்புகள் செல்லாது என யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு எச்சரித்துள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., யின் செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பல உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை செய்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகின்றன.அத்தகைய ஒப்பந்தங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் பெயரில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை.இது தொடர்பாக விளம்பரங்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படுவது, யு.ஜி.சி., கவனத்துக்கு வந்துள்ளன. அவ்வாறு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற படிப்பு களில் சேரும் முன், எச்சரிக்கையாக செயல்படுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us